புதுவையில் புயல்போல் பரவும் கொரோனா… கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
புதுச்சேரியில் ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 562 பேரிடம் ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 27 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரியில் 19 பேர், காரைக்காலில் 6 பேர், மாஹேவில் இருவர் அடங்குவர். தற்போது மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 150-ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மாநிலதில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் முழுவதும் ஒன்றை இலத்தில் பதிவாகி வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில தினங்களாக 15, 17, 22 என அதிகரித்து வந்த நிலையில் இன்று 27 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக வெறும் 562 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 27 பேருக்கு தொற்று என்றால் வழக்காமாக 2500 பேருக்கு நடத்தப்படுவது போல் சோதனை செய்திருந்தால் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்கும் என கூறப்படுகிறது.
புதுவையில் இதுவரை 1,29,527 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,27,496 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1881 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனா தடுப்பூசி முதல் தவணை 8,35,950 பேரும், இரண்டாம் தவணை 5,61,257 பேரும் செலுத்தியுள்ளனர். மொத்தமாக 13,97,207 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் 20 வயது இளம்பெண் உள்ளிட்ட இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்ட அனுமதியால் தொற்று பரவல் அதிகரித்துள்ளதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment