அனுமன் ஜெயந்தி… பஞ்சவாடி ஆஞ்சநேயருக்கு 2000 லிட்டர் பால் அபிஷேகம்!
பஞ்சவாடி ஆஞ்நேயர் கோயிலில் மூலவருக்கு 2000 லிட்டர் பாலில் அபிஷேகம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அடுத்த பஞ்சவாடியில் உள்ள 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்நேயர் கோவில் உள்ளது. இங்கு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மங்கள வாத்தியங்களுடன் மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2000 லிட்டர் பால், சந்தனம் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைனை தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ ஏலக்காய் மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சி அளித்தார். இதில் புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், கடலூரை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment