மார்ச் முதல் நகரங்களில் 100 நாள் வேலைத்திட்டம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 9, 2022

மார்ச் முதல் நகரங்களில் 100 நாள் வேலைத்திட்டம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு!

மார்ச் முதல் நகரங்களில் 100 நாள் வேலைத்திட்டம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு!

மரக்காணம் பேரூராட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க 17 இடங்களிலும், கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.
இந்நிலையில் சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று(09.02.2022) காலையில் 18 வார்டு கவுன்சிலர்களும் வெற்றி பெறவேண்டும் என மரக்காணம் பூமிஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார்.

மரக்காணம் பேரூராட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்:
நகர்ப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டமா?
அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியது என்ன?
Free Games : சின்ன சின்ன விளையட்டு- ஆன்லைனில் லைவாக விளையாடுங்கள்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க 17 இடங்களிலும், கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.

இந்நிலையில் சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று(09.02.2022) காலையில் 18 வார்டு கவுன்சிலர்களும் வெற்றி பெறவேண்டும் என மரக்காணம் பூமிஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார்.

நகை செய்யும் தொழிலாளராக களமிறங்கிய அதிமுக வேட்பாளர்!

அதனைத் தொடர்ந்து விக்னேஷ், வேதனாயகி ஆளவந்தார், பலராமன், மகாலட்சுமி, இளவரசன், அசினா, கணபதி, சத்தியவாணி, சேகர், ஷபினாபேகம், உமல்அபீபா, கீதாகுணசேகரன், சுவீதா, செல்வராஜ், சிவா, சுதா, முத்துவேல் ஆகிய வேட்பாளர்கள் ஆதரித்து 18 வார்டுகளிலும் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் உங்கள் வீட்டு பிள்ளையாய் இருப்பதாக பெருமிதம் தெரிவித்த அவர், திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் மக்கள் நிம்மதியுடன் இருப்பதாக கூறினார்.மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் மரக்காணம் பேரூராட்சிக்கு 100 நாள் வேலை திட்டம் மார்ச் மாதத்தில் கொண்டு வரப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி அளித்தார். இதனால், நகர்ப்புற பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மரக்காணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் ரவிகுமார், சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி, மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad