வங்கியில் 1000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது.. அதிரடி உத்தரவு!
இந்த வங்கியில் இனி 1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கி விதிமுறைகளை மீறும் வங்கிகள் மற்றும் தொடர்ந்து இயங்க முடியாமல் தவிக்கும் வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் எடுப்பதும் அபராதம் விதிப்பதும் வழக்கமான நடவடிக்கைதான். அந்த வகையில் நிதி ரீதியாக மிகவும் நெருக்கடியான சூழலில் இருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த மில்லத் கூட்டுறவு வங்கியை ரிசர்வ் வங்கி தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளது.
இந்த வங்கியில் பணம் போட்டவர்கள் வித்டிரா செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கியில் பணம் போட்ட வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் 1000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது. இந்தக் கட்டுப்பாடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2022 மே 7ஆம் தேதி வரை இந்தத் தடை நீடிக்கும்.
முதலில் 2019ஆம் ஆண்டின் மே மாதத்தில் இவ்வங்கி மீது ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது. அதன் பின்னர் 2021 மே 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, மில்லத் கூட்டுறவு வங்கி இனி வாடிக்கையாளர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ கடன் வழங்க முடியாது. அதேபோல, வழங்கிய கடனை ரத்து செய்யவும் ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெறவேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கான வங்கிச் சேவைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இவ்வங்கியில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் மூன்று மாதங்களுக்கு கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment