பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு கொரோனா பாதிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 7, 2022

பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு கொரோனா பாதிப்பு!

பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு கொரோனா பாதிப்பு!


பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று மாலை இறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஏற்கெனவே பரப்புரையை தொடங்கியுள்ளனர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் நிலையில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி மற்றும் தேர்தல் வியூகங்கள் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜி.கே.மணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- "எனக்கு கொரோனா தொற்றினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நாளை(08.02.2022) நடைபெறவுள்ள சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் தான் 05.02.2022 அன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad