திமுகவின் சமூகநீதி கூட்டமைப்பு: முதல் ஆளாய் இணைந்த காங்கிரஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 7, 2022

திமுகவின் சமூகநீதி கூட்டமைப்பு: முதல் ஆளாய் இணைந்த காங்கிரஸ்!

திமுகவின் சமூகநீதி கூட்டமைப்பு: முதல் ஆளாய் இணைந்த காங்கிரஸ்!திமுகவின் அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் காங்கிரஸ் முதல் ஆளாய் இணைந்துள்ளது.
'பிற்படுத்தப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட, அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும்' என்று கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்திருந்தார்.
தனது இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக கூட்டமைப்பில் இணைய வருமாறு காங்கிரஸ், அதிமுக, ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 37 கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் தனித்தனியாக கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், அந்த கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியிடம் திமுக எம்பி டி.ஆர்.பாலு இன்று நேரில் சந்தித்து வழங்கினார்.அந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட சோனியா காந்தி, தமிழக முதல்வரின் இந்த அழைப்பை காங்கிரஸ் ஏற்றுகொண்டதன் அடையாளமாக, அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்பமொய்லியை இருப்பார் என்று தெரிவித்தார்.
சோனியா காந்தி - டி.ஆர்.பாலு சந்திப்பின்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திமுகவின் சமூக நீதியில் கூட்டமைப்பில் அதிமுக இணையாது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சில தினங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியிருந்த கடிதத்தில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad