மொதல்ல அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்க...முதல்வரின் தூக்கத்தை கலைத்த டெல்லி!
மத்திய அரசின் நிதி உதவிகள் கிடைக்க வேண்டுமென்றால், முதலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு டில்லியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
ஆட்சி, அதிகாரம், அரசியல் என அனைத்திலும் எப்போதும் பரபரப்பாக பேசப்படுபவர்கள் பட்டியலில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு.
அமைச்சராக பொறுப்பேற்றதும் தான் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே மத்திய அரசை 'ஒன்றிய அரசு' எனக் குறிப்பிட்டு, தேசிய அளவில் கவனத்தை பெற்றவர்... பிரிதொரு சந்தர்ப்பத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், அரசின் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், அதனை பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவித்து உடன்பிறப்புகளையே ஒரு கணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர்.
இவற்றுக்கு நடுவே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசை துறைரீதியாக விமர்சித்து மத்திய அரசை கடுப்பேற்றி வருபவர். தமிழக நிதியமைச்சரின் இதுபோன்ற தன்னிச்சையான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த மத்திய நிதியமைச்சகமும் செம டென்ஷனில் இருக்கிறதாம். விளைவு.... மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கான நிதி உதவிகள் கிடைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாம்.
மாநிலத்தில் அண்மையில் பெற்ற வரலாறு காணாத பருவமழையின் விளைவாக 20 மாவட்டங்கள் சின்னாபின்னமாகின. மழையால் சேதமடைந்த மாவட்டங்களை நிரந்தரமாக சீரமைக்க மொத்தம் 6,200 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு சில, பல மாதங்களுக்கு முன் கோரியிருந்தது.
No comments:
Post a Comment