விசிக வின் முதுகில் குத்திய திமுக; உள்குத்து ட்விஸ்ட்!
கரூர் மாநகராட்சியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சீட் ஒதுக்கிவிட்டு திமுக வேட்பாளர் போட்டியிட்டதால் மாநகராட்சியில் பரபரப்பு
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்., 19ல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இந்நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வேட்பாளர் போட்டியிடுவதால் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டத்திலிருந்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி பல்வேறு இடங்களில் தனித்துப் போட்டியிடுவதாகவும், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆங்காங்கு தனித்துப் போட்டியிட்டும் வருகின்றது. இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு கரூர் மாநகராட்சியில் 11 வார்டு ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.இந்நிலையில் அந்த வார்டில் திமுக வேட்பாளர் பழனி குமார் என்பவரும் போட்டியிடுவதை கண்டு விசிக கட்சியினர் அதிர்ந்து போயினர். இதனையடுத்து செந்தில் பாலாஜி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், கூட்டணி தர்மத்தை மீறி அமைச்சர் செயல்படுவதாக கூறி கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒன்றுக்கூடி கண்டனம் தெரிவித்தனர்.இது குறித்து திமுக நகர செயலாளர் கோல்ட் ஸ்பாட் ராஜா என்பவருக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது அவரது செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. அதே போல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது செல்போன் அனைத்து இருந்ததால் விசிக கட்சியினர் ஆத்திரம் அடைந்தனர். இதனால் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் அமைச்சர் செந்தில்பாலாஜி தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி தக்க பதிலடி கொடுக்கும் என்று கூறி மாநகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
No comments:
Post a Comment