வீட்டை விற்றும் உயிர் பிழைக்காத பேரன்... விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட பாட்டி
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்றும் உயிரான பேரனை காப்பாற்ற முடியவில்லை என்ற ஏக்கத்தில் பாட்டி விஷம் குடித்து தற்கொலை உடலை கைப்பற்றி இரணியல் போலீசார் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த தினவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், ரோசம்மாள் தம்பதியர். விவசாய கூலி வேலை பார்க்கும் இந்த தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உண்டு. மகன் மற்றும் மகள் திருமணமாகி தனி குடித்தனம் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் தனிமையில் வசித்து வந்த வயதான தம்பதியினர்
தங்களுக்கு துணையாக தங்கள் மகள் வழி பேரனான ஜெகன் என்பவரை சிறு வயது முதலே தங்கள் பராமரிப்பில் படிக்க வைத்து வந்துள்ளனர். கடந்த 1 வருடத்திற்கு முன் ஜெகனை தாத்தா சுந்தர்ராஜ் மற்றும் பாட்டி ரோசம்மாள் சேர்ந்து பல லட்சம் ரூபாய் செலவழித்து வேலைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற ஜெகனுக்கு ஒரு சில வாரத்திலேயே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனையறிந்த பாட்டி ரோசம்மாள் மீண்டும் பணம் செலவழித்து பேரனை சொந்த ஊருக்கு அழைத்து வந்து மருத்துவம் பார்த்துள்ளார்.
தனது பேரனின் உயிரை காப்பாத்த ஆசை ஆசையாய் தான் கட்டிய வீட்டையும் விற்று மருத்துவம் பார்த்த நிலையில் பேரன் ஜெகன் சிகிச்சை பலனின்றி கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். ஆசை ஆசையாய் தான் கட்டிய வீட்டை விற்றும் தன் பாசமிகு பேரனை காப்பாற்ற முடியவில்லை என்ற ஏக்கத்தில் மூதாட்டி ரோசம்மாள் உணவு உண்ணாமல் துக்கத்திலே இருந்துள்ளார்.
இந்த நிலையில், வெறுப்படைந்த பாட்டி ரோசம்மாள் கடந்த 2ம் தேதி காலை விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் கிடந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில் ரோசம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தற்கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
பேரன் இறந்த வருத்தத்தில் பாட்டியும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment