நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தருமபுரி மாவட்டத்தில் 802 பேர் போட்டி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 7, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தருமபுரி மாவட்டத்தில் 802 பேர் போட்டி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தருமபுரி மாவட்டத்தில் 802 பேர் போட்டி!



தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் தேர்தலுக்கான 1094 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனையின் போது 25 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று (07.02.2022) தருமபுரி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 212 வேட்பு மனுக்களில் 36 வேட்பு மனுக்கள் திரும்ப பெற்றுகொள்ளப்பட்டு 176 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேலும், பேரூராட்சிகளை பொறுத்தமட்டில், 10 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 159 வார்டுகளில் 230 வேட்பு மனுக்கள் திரும்ப பெற்றுகொள்ளப்பட்டும், 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டும், 625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த 1069 வேட்பு மனுக்களில் வேட்பு மனுக்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்றைய தினம் (07.02.2022) 266 வேட்பு மனுக்கள் திரும்ப பெற்றுகொள்ளப்பட்டும், 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டும், 801 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் வார்டு எண். 5-ல் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த வி.ஹசினா (திமுக) வார்டு எண். 11-ல் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளர் எம்.ஆயிஷா ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad