அனல் பறக்கும் பிரச்சாரம்; திமுகவை சுளுக்கெடுத்த இபிஎஸ்!
தமிழநாட்டிலேயே அதிகப்படியான திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட ஒரே மாவட்டம் தூத்துக்குடி மட்டும் தான் என எடப்பாடி கே பழனிசாமி பேச்சு.
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற தொண்டர்கள் இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும். அதே போல் தூத்துக்குடி மாவட்டம் அதிமுக கோட்டையாக இந்த தேர்தலின் வெற்றி நிரூபிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூலம் அதிமுக வெற்றி பெற்று திமுகவிற்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்றும், திமுக ஆட்சிக்கு வந்த 9-மாத காலத்தில் முதல்வர் ஸ்டாலின் எதையும் செய்யவில்லை என் குற்றம் சாட்டினார்.திறமையற்ற முதல்வர் நாட்டினை ஆண்டு கொண்டு இருப்பதாக தெரிவித்த அவர் பத்திரிக்கை செய்திக்காக சாலை ஓர டீ கடைகளில் முதல்வர் டீ குடித்து வருகிறார் என்று கிண்டலடித்தார். அது போல் உடற்பயிற்சி செய்வது,சைக்கிள் ஓட்டுவது இவையெல்லாம் விளம்பரம் தேடி தன்னை வெளிக்காட்டவே ஒழிய மக்களுக்கான செயல்கள் அல்ல, இதற்காகவா மக்கள் ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டார்கள் என்று கேள்வி எழுப்பினார்.அதே போல் தேர்தல் நேரத்தில் சொன்ன 525-வாக்குறுதிகளில் 200-வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். முக்கிய வாக்குறுதியாக தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு கடன், கல்வி கடன் ரத்து செய்வதாக சொன்ன திமுக ஏன் இதுவரை செய்யவில்லை என்று வினா எழுப்பினார். இதே போல் தேர்தல் வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்கள் 35-லட்சம் பேர் இதுவரை நகைக் கடன் வட்டி செலுத்தி வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.
அதே போல் பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு செய்வதாக சொன்ன திமுக செய்ய தவறி விட்டதாகவும் இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக பேசினார். அதே போல் ஆட்சியில் இருக்கும் போது ஒன்று பேசுவதும், இல்லாத போது ஒன்று பேசுவதும் திமுகவுக்கு வாடிக்கையாகி விட்டதாக கூறினார். கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்பு முதல் முறை 1000-ரூபாயும், இரண்டாவது முறை 2500-ரூபாய்யும் நல்ல தரமான பொருட்களும் வழங்கினோம், ஆனால் திமுக தரம் இல்லாத பொங்கல் பரிசினை கொடுத்து மக்களை பண்டிகையை கொண்டாட விடாமல் தடுத்துள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment