பாஜகவுக்கு அந்த தகுதியே இல்லை... காங்கிரஸ் கடும் சாடல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 25, 2022

பாஜகவுக்கு அந்த தகுதியே இல்லை... காங்கிரஸ் கடும் சாடல்!


பாஜகவுக்கு அந்த தகுதியே இல்லை... காங்கிரஸ் கடும் சாடல்!

பாஜக ஆட்சி செய்வதற்கே தகுதி இல்லாத கட்சி என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கடுமையாக சாடியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் மேலிட தேர்தல் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா ஆலோசனை நடத்தினார்.
சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் 28ம் தேதி தமிழகம் வர இருக்கும் ராகுல் காந்தியை வரவேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சென்னையில் துணை மேயர் பதவி கேட்ட இருப்பதாகவும் அது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் மௌலானா, முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே ஆர் ராமசாமி மாநிலத் துணைத் தலைவர் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

அதனைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் காங்கிரஸ் மேலிட தேர்தல் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

இதனை தொடர்ந்து கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி பற்றி பெரிதாக விமர்சிக்க தேவை இல்லை எனவும், அது எழுதி வைக்கப்பட்ட ஒன்று என்றும் அவர் கூறினார். மேலும் பாஜகவுடன் அவர்களுக்கு ஏற்பட்ட உறவு தான் அதிமுகவின் இந்த தோல்விக்கு காரணம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சரின் புத்தக வெளியீடு விழாவிற்கு ராகுல் காந்தி வருகிறார் எனவும், வெற்றி பெற்ற உறுப்பினர்களை சந்தித்து விவாதிக்க இருக்கிறார் என அவர் தெரிவித்தார்.
ரபேல் விமானம் வாங்குவதை விட, நமது சொந்த விமானங்கள் இருக்கின்றன அவற்றை சிறப்பாக செயல்படுத்தலாம் என பல முறை கூறினோம், ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

உக்ரைனில் தவிக்கும் இந்திய மக்களை காப்பாற்றி வர நம்மிடம் சொந்த விமானம் இல்லை என்பது பாஜக ஆட்சி செய்வதற்கே தகுதி இல்லாத கட்சி என்பதற்கு சான்று. மோடியும், அவரது கட்சியும் வெட்கப்பட வேண்டிய விஷயம் இது என்று கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad