டைரக்டர் நெல்சனுக்கு இவ்வளவு பெரிய குழந்தையா…? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 13, 2022

டைரக்டர் நெல்சனுக்கு இவ்வளவு பெரிய குழந்தையா…? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!

டைரக்டர் நெல்சனுக்கு இவ்வளவு பெரிய குழந்தையா…? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!


நெல்சன் மனைவி மோனிஷா மற்றும் அவரது குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகின்றன
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார்.
விஜய் டிவியில் சாதாரண ஷோ டைரக்டராக இருந்தவர் அப்படியே படிப்படியாக சிவகார்த்திகேயன், விஜய், ரஜினிகாந்த் என டாப் லெவலுக்கு போயிட்டாரே என பல பெரிய இயக்குநர்களே பொறாமையில் பொங்கி வருகிறார்களாம்.சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் மச்சக்காரர் தான் நெல்சன் என்பதற்கு உதராணமாக அவரது மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.இயக்குநர் லோகேஷ் கனகராஜை போலவே கோலிவுட்டில் அதிரடியாக பெரும் வளர்ச்சியை ருசித்து வருகிறார் இயக்குநர் நெல்சன். விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களை இயக்கி வந்த இவர், கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
சிவகார்த்திகேயனின் டாக்டர் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க அடுத்து பீஸ்ட், தலைவர் 169 என மெகா பிளாக்பஸ்டர் படங்களை தமிழ் சினிமாவுக்கு தர உள்ளார்.இவரது பலமே டார்க் காமெடி தான். தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்த டார்க் காமெடி வகையறா படங்களை தொடர்ந்து இயக்கி குறைந்த ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார் இயக்குநர் நெல்சன். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை போலவே பீஸ்ட் மற்றும் தலைவர் 169 படமும் டார்க் காமெடி ஜானரிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குநர் நெல்சனுக்கு இன்னமும் திருமணம் எல்லாம் ஆகியிருக்காது என நினைத்த ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக அவரது மனைவி மோனிஷா நெல்சன் மற்றும் அவரது குழந்தையின் புகைப்படங்கள் எல்லாம் தற்போது டிரெண்டாகி வருகின்றன. பார்க்க அவரே ஒரு ஹீரோயின் போலத்தான் அழகாக இருக்கிறார் என ஏகப்பட்ட ரசிகர்கள் நெல்சனை வாழ்த்தி வருகின்றனர்.

மனைவி மட்டுமின்றி ஆறு வயதில் அழகிய ஆண் குழந்தையும் இயக்குநர் நெல்சனுக்கு உள்ளார். நடிகர் அஜித் குமாரின் மகனுக்கு வைக்கப்பட்டிருக்கும் அதே ஆத்விக் எனும் பெயர் தான் இயக்குநர் நெல்சன் மகனுக்கும் வைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இன்ஸ்டாகிராமில் மோனிஷா நெல்சன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களையும் விஜய் டிவி பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி நீலகண்டனும் இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவும் நெருங்கிய தோழிகள் என்பது இந்த புகைப்படத்தை பார்த்தாலே தெளிவாக தெரிகிறது. டிடியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.


மகன் ஆத்விக் உடன் அப்பா நெல்சன் இருக்கும் செம க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டு தனது கணவருக்கு மோனிஷா நெல்சன் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன போஸ்ட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சினிமாவில் மட்டுமல்ல குடும்ப வாழ்க்கையிலும் சக்சஸான மனிதர் தான் நெல்சன் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad