தனது காதலை பற்றி மனம் திறந்து பேசிய புகழ்…!
5 வருட காதலைப் பற்றி மனம் திறந்த புகழ்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர் புகழ்.விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர் புகழ்.இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலி குறித்து அவர் தற்போது மனம் திறந்துள்ளார்.விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி காணப்படுகிறது.
சமீபத்தில் இதன் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. கோமாளிகள் மற்றும் குக்குகளின் அலப்பறைகள், செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட்டின் ரசிக்கும்படியான பேச்சுகள் நிகழ்ச்சிகளை களைக்கட்டி வருகிறது.
குக்கிங்கையும் காமெடியையும் மிக்ஸ் ரசிகர்களை கவர முடியும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவி நிரூபித்துள்ளது. சமையலை பார்க்கும் ஆர்வத்துடனும் கோமாளிகளின் சேட்டைகளுடனும் இந்த நிகழ்ச்சியை ரசிகர்களை பார்த்து வருகினற்னர்.கடந்த இரண்டு சீசன்களில் இரண்டாவது சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி, புகழ் உள்ளிட்டவர்கள் மிகுந்த புகழை பெற்று வெள்ளித்திரையிலும் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அஸ்வினும் நாயகனாக நடித்து வருகிறார்.இந்நிலையில் அதிகமான பட வாய்ப்புகள் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் புகழ் பங்கேற்க மாட்டார் என்று நிகழ்ச்சி துவக்கத்தில் கூறப்பட்டது.ஆனால் முதல் வாரத்தில் பங்கேற்காத புகழ், தற்போது இரண்டாவது வாரத்திலிருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதனால் நிகழ்ச்சி
களைகட்டி வருகிறது.ரசிகர்கள் வெகுவாக ரசித்துவரும் இந்த நிகழ்ச்சியில் தனது காதல் மற்றும் திருமணம் குறித்து புகழ் மனம் திறந்துள்ளார். தனது காதல் கதை குறித்து செஃப் வெங்கடேஷ் பட்டின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் புகழ். பென்சி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவிக்கு வருவதற்கு முன்னதாகவே பென்சியை காதலித்து வருவதாகவும், அவர் தன்னுடைய பர்பார்மன்சிற்கு அதிகமான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த ஆண்டில் தனது திருமணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment