ஓபிஎஸ், எடப்பாடிக்கு மற்றொரு ஷாக்; அதிமுக நிர்வாகிகள் கலக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 23, 2022

ஓபிஎஸ், எடப்பாடிக்கு மற்றொரு ஷாக்; அதிமுக நிர்வாகிகள் கலக்கம்!

ஓபிஎஸ், எடப்பாடிக்கு மற்றொரு ஷாக்; அதிமுக நிர்வாகிகள் கலக்கம்!ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மற்றொரு ஷாக் தகவல் வந்துள்ளது. இதனால் அதிமுக நிர்வாகிகள் கலங்கிபோய் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது.
மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு நடந்த இந்த தேர்தலில் 57,746 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று பிப்ரவரி 22ம் தேதி காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையானது தமிழகம் முழுவதும் 279 மையங்களில் நடைபெற்றது.இந்த தேர்தலில் பத்மனாபபுரம் நகராட்சி 14வது வார்டில் திமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பத்மனாபபுரம் அதிமுக நகர செயலாளர் மணிகண்டன் 2 வாக்குகள் மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார்.

இந்த தகவல் அறிந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஷாக் ஆகி, ‘அதிமுக இவ்ளோ தான் ஓட்டு வாங்கியதா?’ என நிர்வாகிகளிடம் கேட்டு தங்களது பங்குக்கு எரிந்து விழுந்துள்ளனர். இதனால் அதிமுக நிர்வாகிகள் கலங்கிபோய் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad