கைக்கு வந்த தேர்தல் ரிசல்ட்; அதிர்ச்சியில் உறைந்த சரத்குமார்!
சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் முடிவுகளை கையில் வாங்கி பார்த்த சரத்குமார் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளார்.
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது.மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு நடந்த இந்த தேர்தலில் 57,746 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று பிரவரி 22ம் தேதி காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையானது தமிழகம் முழுவதும் 279 மையங்களில் நடைபெற்றது.
இந்த தேர்தலில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி 25வது வார்டில் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நகர செயலாளர் சதீஷ்குமார் போட்டியிட்டார். அந்த வார்டில் இவருக்கு ஓட்டு இல்லை.
இதன் காரணமாக, தேர்தலில் சதீஷ்குமார் ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இந்த தேர்தல் முடிவு கைக்கு வந்ததுமே சரத்குமார் அதிர்ச்சியில் உறைந்து போனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளை அழைத்த சரத்குமார், ‘இந்த அவமானத்தையே பாடமாக எடுத்துக்கொண்டு கட்சியை வளர்க்க தொண்டர்கள் பாடுபட வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment