நகைகளை ஏலம் விடுவதில் அடகுக் கடைகள் ரூல்சை ஃபாலோ செய்கின்றனவா? -அரசுக்கு ஐகோர்ட் கேள்வி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 23, 2022

நகைகளை ஏலம் விடுவதில் அடகுக் கடைகள் ரூல்சை ஃபாலோ செய்கின்றனவா? -அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

நகைகளை ஏலம் விடுவதில் அடகுக் கடைகள் ரூல்சை ஃபாலோ செய்கின்றனவா? -அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!


ஏல நடவடிக்கையில் தமிழ்நாடு அடகுக்கடை வணிகர் சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சியை சேர்ந்த ஜி.சுப்ரமணியம் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், தனியார் நடத்து அடகுக்கடைகளில் அடமானம் வைக்கப்படும் நகைகளை ஏலம் விடுவதற்கு முன்பாக சென்னையில் மாவட்ட ஆட்சியரிடமும், பிற மாவட்டங்களில் வருவாய் கோட்டாட்சியரிடமும் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அனுமதி கோரும்போது அடமான நகை, அடமானம் வைத்தவர் குறித்த விவரங்களுடனும், ஏலம் விடும் நிறுவனம் குறித்த விவரங்களுடனும் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அடகுக்கடை வணிகர் சட்டமும், விதிகளும் வகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவ்வாறு விண்ணப்பிக்காமல் நேரடியாக ஏலம் விடப்படுவதாகவும், சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'விதிகளை மீறுவதாக கூறும் மனுதாரர், சம்பந்தபட்டவர்களை வழக்கில் சேர்க்கவில்லை என்றும், பொதுநல நோக்குடன் இந்த வழக்கு தொடரப்படவில்லை' என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad