தொழிற்பள்ளிகள் துவங்க கால அவகாசம்; கலெக்டர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 20, 2022

தொழிற்பள்ளிகள் துவங்க கால அவகாசம்; கலெக்டர் அறிவிப்பு!

தொழிற்பள்ளிகள் துவங்க கால அவகாசம்; கலெக்டர் அறிவிப்பு!தொழிற்பள்ளிகள் தொடங்குவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022 - 2023ம் கல்வியாண்டிற்கு ஜனவரி 02.01.2022 முதல் 30.04.2022 நள்ளிரவு 11.59 முடிய புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகார நீட்டிப்பு மற்றும் கூடுதல் தொழிற் பிரிவுகள் மற்றும் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.in.gov.in என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.04.2022 ஆகும். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தை தொலைபேசி: 044- 22501006 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad