பிப்.22 மின்சார ரயில்கள் இயங்காது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்.22-ம் தேதி 6 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - விஜயவாடா வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 22ம் தேதி மின்சார கம்பி பொருத்தும் பணி நடைபெறவுள்ளது.
இதனால், அன்று விஜயவாடா - சென்னை சென்ட்ரல்(12711) இடையே இயக்கப்படும் விரைவு ரயில் கூடூர் - சென்னை சென்ட்ரல் இடையேயும், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் முதல் கூடூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டை இடையே காலை 4:25 மணிக்கு இயக்கப்படும் ரயில், ஆவடி - மூர்மார்க்கெட் இடையே காலை 4:25 மணிக்கு இயக்கப்படும் ரயில், நெல்லூர் - சூலூர்பேட்டை இடையே காலை 10:15 மணிக்கு புறப்படும் ரயில், சூலூர்பேட்டை - நெல்லூர் இடையே காலை 7:45 மணிக்கு இயக்கப்படும் ரயில், சூலூர்பேட்டை- சென்னை மூர்மார்க்கெட் இடையே 12:35 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட் - ஆவடி இடையே இரவு 9:15 மணிக்கு இயக்கப்படும் 6
ரயில்கள் 22ம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment