தமிழகத்திற்கு புதிய ஆபத்து - மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 20, 2022

தமிழகத்திற்கு புதிய ஆபத்து - மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு?

தமிழகத்திற்கு புதிய ஆபத்து - மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு?


ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளுக்கு, நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதை ஒட்டி நடைபெற்ற அரசியல் கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

அதாவது, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், பொது மக்களும் முறையாக கடைபிடிக்கவில்லை. இதன் காரணமாக வரும் நாட்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பொது மக்களும் வெளியே செல்லும் போது, முகக் கவசம் அணியாமல் அலட்சியத்துடன் செல்வதையும் காண முடிகிறது.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டில், ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் திரிபான, "பிஏ 2" வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது, "அதி வேகமாகப் பரவக் கூடியது என்றும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடியது" என்றும் ஜப்பான் நாட்டைைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வைரஸ் தொற்று ஒமைக்ரான் வைரஸ் தொற்றைப் போல், இந்தியாவுக்குள் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள், கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் போன்றவை மீண்டும் அமலாக வாய்ப்பு உள்ளது. பிஏ 2 வைரஸ் தாக்கத்தின் தீவிரத்தை பொறுத்தே இது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad