நாளை மறு வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 20, 2022

நாளை மறு வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

நாளை மறு வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!


7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
தமிழகத்தில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளுக்கு, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலும் வாக்காளர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகின. தலைநகர் சென்னையில், 43 சதவீத வாக்குகளே பதிவாகின. பிரபலங்களை பொறுத்தவரை, நடிகர் விஜய் தவிர மற்ற நடிகர்கள் யாரும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முன்வரவில்லை.
நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் நிலவியதாகவும், ஒருசில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புகார்கள் எழுந்த 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, வண்ணாரப்பேட்டையில் உள்ள வார்டு எண் 51ல், வாக்குச்சாவடி எண் 1174 மற்றும் பெசன்ட் நகர் ஓடைக்குப்பத்தில் உள்ள வார்டு எண் 179ல், வாக்குச்சாவடி எண் 5059 ஆகிய இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி வார்டு எண் 17ல் வாக்குச்சாவடி 17 டபிள்யு மற்றும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு எண் 16ல் வாக்குச்சாவடி 16 எம், வாக்குச்சாவடி 16 டபிள்யு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 25ல், வாக்குச்சாவடி 57 எம், வாக்குச்சாவடி 57 டபிள்யு ஆகிய இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.மேலே குறிப்பிட்ட 5 வார்டுகளில், 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும், கடைசி ஒரு மணி நேரம் அதாவது, மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை பதிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad