மூன்று மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க சதி... சிவசேனா பகீர் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 15, 2022

மூன்று மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க சதி... சிவசேனா பகீர் தகவல்!

மூன்று மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க சதி... சிவசேனா பகீர் தகவல்!


மூன்று மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதி வேலைகள் நடைபெற்று வருவதாக சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஹைலைட்ஸ்:
சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் செய்தியாளர்கள் சந்திப்பு
மகாராஷ்டிரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் ஆட்சி கவிழ்க்க சதி
மத்திய பாஜக அரசை மறைமுகமாக சாடல்
சிவசேனை எம்பி சஞ்சய் ராவத், மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டு, மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க உதவிமாறு அழைப்பு விடுத்தனர்.

இல்லாவிட்டால் அதன் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தனர். அதற்குப் பிறகுதான் அமலாக்கத் துறை அதிகாரிகள் எனக்கு நெருக்கமானவர்களுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க மத்திய விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க சதி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

மார்ச் 18 முதல் இலவச கேஸ்: மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்!

பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையாவின் மகன் நீல் சோமையா, பிஎம்சி வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் வாத்வானின் வணிக கூட்டாளி. இந்த வங்கி மோசடி வழக்கில் கிரித் சோமையா மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட வேண்டும்.

இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்" என்று சஞ்சய் ராவத் ஆவேசமாக தெரிவித்தார்.
Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
உங்கள் கருத்தை பதிவு செய்க

No comments:

Post a Comment

Post Top Ad