தனியார் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு.. தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 5, 2022

தனியார் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு.. தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு!

தனியார் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு.. தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு!


தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்விக்கான கட்டணங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் விதிமுறைகளை மாற்றியுள்ளது.
அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பு இடத்தை பெற்ற மாணவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரியில் அதிகபட்சமாக 50% மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.அரசு ஒதுக்கீடு இடங்கள் (government quota seats) 50 விழுக்காடுக்கு கீழே இருந்தால், தகுதி அடிப்படையில் மீதமுள்ள மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad