Vijay: 'தளபதி 66' படத்தில் டபுள் கொண்டாட்டம்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 6, 2022

Vijay: 'தளபதி 66' படத்தில் டபுள் கொண்டாட்டம்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

Vijay: 'தளபதி 66' படத்தில் டபுள் கொண்டாட்டம்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!



'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து வம்சி பைடிபல்லி இயக்கத்தில் 'தளபதி 66' படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் 'பீஸ்ட்' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். .
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் செல்வராகவன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'சாணிக் காயிதம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து முடித்துள்ள செல்வராகவன் அடுத்ததாக 'பீஸ்ட்' படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார்..

'பீஸ்ட்' படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 66-வது படம் உருவாக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு மகள் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

No comments:

Post a Comment

Post Top Ad