ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை கேட்டு அழுத பெற்றோர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 6, 2022

ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை கேட்டு அழுத பெற்றோர்

ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை கேட்டு அழுத பெற்றோர்


தனுஷ் தன் திருமண வாழ்க்கை பற்றி சொன்னதை கேட்டு அவரின் பெற்றோர் கண்ணீர்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். அவர்கள் பிரிந்து வாழ்ந்தாலும், அவர்களை சேர்த்து வைக்க இரு குடும்பத்தாரும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.

நீ ஐஸ்வர்யாவுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று அப்பாவும், அம்மாவும் தனுஷிடம் கூறினார்களாம். அப்பா, என் திருமண வாழ்க்கையில் நடந்தது என்னவென்றே உங்களுக்கு தெரியாது.ஐஸ்வர்யா என்னவெல்லாம் செய்தார் தெரியுமா என்று தன் மனதில் இருந்ததை எல்லாம் அரை மணிநேரம் கொட்டித் தீர்த்தாராம் தனுஷ். அதை பொறுமையாக கேட்ட கஸ்தூரி ராஜாவும், மனைவியும் அழுதுவிட்டார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

அப்பா, நான் காரணம் இல்லாமல் அடம்பிடிக்கவில்லை. இனியும் என்னால் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது, நான் உங்களிடம் சொன்னது எல்லாம் ஒரு பாதி கூட இல்லை. முழுவதையும் கேட்டால் தாங்க மாட்டீர்கள். அதனால் சொல்லவில்லை என்றாராம் தனுஷ்.இதற்கிடையே அப்பா ரஜினியின் கோபத்திற்கு பயந்து மீண்டும் தனுஷுடன் சேர ஐஸ்வர்யா தயாராக இருக்கிறாராம். ஆனால் தனுஷ் மனம் மாறுவதாக இல்லையாம்.



No comments:

Post a Comment

Post Top Ad