உனக்கு நிம்மதியா தூக்கம் வருதா? சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய நடிகரின் கேள்வி..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 6, 2022

உனக்கு நிம்மதியா தூக்கம் வருதா? சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய நடிகரின் கேள்வி..!

உனக்கு நிம்மதியா தூக்கம் வருதா? சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய நடிகரின் கேள்வி..!சூர்யாவிற்கு ஆரம்பகாலகட்டத்தில் நடிகர் ரகுவரன் கூறிய அட்வைஸ்
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். தன் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் சூர்யாவிடம் ஆரம்பகாலத்தில் ஒரு பிரபலம் கேட்ட கேள்வி அவரை எந்த அளவிற்கு மாற்றியது என்பது பற்றி அவர் கூறிய வீடியோ வைரலாகிவருகிறது. சூர்யா நடிக்கவந்த ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்தார். நடிப்பு மற்றும் நடனம் அந்த அளவிற்கு எடுபடவில்லை என கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.

நடிக்கும் படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் சூர்யாவுடன் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்தவர் நடிகர் ரகுவரன். இருவரும் இணைந்து படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது நிறைய விஷயங்களைப்பற்றி பேசுவார்களாம். அப்போது ஒருநாள் பேசுகையில் ரகுவரன் சூர்யாவை பார்த்து உனக்கு நிம்மதியா ஒழுங்கா தூக்கம் வருதா என கேட்டுள்ளார்.நம்மை விமர்சனம் செய்பவர்களுக்கு நம் வெற்றியின் மூலம் தக்க பதிலடி கொடுக்கவேண்டும். அதுவரை நாம் தூக்கத்தையெல்லாம் துளைக்கவேண்டும். உன்னை பற்றி விமர்சனம் செய்வோருக்கு நீ யார் என்று நிரூபித்துக்காட்டு. அதன் பிறகுதான் உனக்கு நிம்மதியான தூக்கம் வரும் என்றாராம்.

ரகுவரனின் இந்த பேச்சு சூர்யாவை சிந்திக்கவைத்ததாம் . அதன் பிறகு கடுமையாக உழைத்த சூர்யா பிதாமகன், காக்க காக்க, ஆறு, வேல், வாரணம் ஆயிரம் என படத்திற்கு படம் தன்னை மெருகேற்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இன்று நடிகராக மட்டுமில்லாமல் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் சூர்யா வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad