ஒரே நாளில் 3.35 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொது முடக்கம், தடுப்பூசி போன்ற காரணங்களால் உலக அளவில் பரவலாக கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. எனினும் சில நாடுகள் இன்னும் கொரோனாவின கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.
குறிப்பாக ஆசிய நாடுகளை இன்னும் கொரோனா முற்றிலும் விடுவதாக இல்லை. இதற்கு தென்கொரியாவில் நேற்று (மார்ச் 26) ஒரே நாளில் பதிவாகி உள்ள கொரோனா எண்ணிக்கையையே உதாரணமாக சொல்லலாம்.
அந்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் மொத்தம் 3.35 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.15 கோடியாக அதிகரித்துள்ளது.
இதேபோன்று மற்றொரு தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் நேற்று மட்டும் 1.03 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் 14 ஆயிரம் பேருக்கும், சீனாவில் 1,335 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்த தென்கொரியா, சீனா, நியூசிலாந்து ஆகிய நாடுகள், தற்போது கொரோனா மூன்றாவது அலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்தது.
No comments:
Post a Comment