கிட்டதட்ட 5 மாதங்களாக எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாத நிலையில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டே வாரத்துக்குள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய பாஜக அரசின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை மாதத்துக்கு இருமுறை மாற்றி அமைக்கும் நடைமுறை 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இருந்து வந்தது.
இந்த வழிமுறையையே 2014 இல் ஆட்சியமைத்த மோடி தலைமையிலான மத்திய அரசும் பின்பற்றி வந்தது. 2017 மே மாதம் வரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், ஜூன் மாதத்தில் இருந்து எரிபபொருட்களின் விலை மாதம் இருமுறை என்பதற்கு பதிலாக, அன்றாடம் விலை நிர்ணயிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அன்றில் இருந்து இன்றுவரை, பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தை விலை நிலவரத்தை பொறுத்து எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, அதற்கேற்றாற்போல் சில்லறை வர்த்தகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதை போல, கச்சா எண்ணெய்யன் விலை குறையும்போது எரிபொருட்களின் விலையும் குறைக்கப்படுவதில்லை என்பது எதி்ர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் இன்னொரு காமெடியை தொடர்ந்து செய்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, எரிபொருளின் விலையை அன்றாடம் மாற்றியமைப்பதாக கூறும் மத்திய பாஜக அரசு, மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் வந்தாலோ, நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் வந்தாலோ. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பிலிருந்து பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவதில்லை, தேர்தல் நேரத்தில் வாககாளர்களின் அதிருப்தி ஆளாமல் இருக்க இந்த டெக்னிக்கை மோடி அரசு பின்பற்றி வருகிறது.
இந்த டெக்னிக்கைதான் அண்மையில் நடைபெற்று முடிந்த உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலின்போதும் மோடி தலைமையிலான மத்திய அரசு கடைபிடித்தது. 5 மாநில பேரவை தேர்தலையொட்டி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் லெளியாக இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், நேற்று முதல் தொடர்ந்து இரண்டு நாட்களாக எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களின் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 1.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், எரிபொருளின விலை மீண்டும் 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் மத்திய பாஜக அரசு மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் 5 காசு, 10 காசுகள் என உயர்த்தப்பட்டு வந்தது. ஐந்து மாநில தேர்தலையொட்டி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக உயர்த்தப்படாத எரிபொருட்களின் விலை தறபோது இரண்டே நாட்களில் மட்டும் 1.5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது எக்காரணம் கொண்டு ஏற்புடையதல்ல.
சர்வதேச சந்தையில் 137 நாட்களாக ஏறாத கச்சா எண்ணெய், தற்போதுதான் உயர்ந்துள்ளதா? சர்வதேச நிலவரப்படி எரிபொருட்களின் விலை மாற்றி அமைக்கப்படும் என்றால், தேர்தல் வந்தால் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாதது ஏன்?
தேர்தல் வந்தால் ஒரு மாதிரி, தேர்தல் முடிந்துவிட்டால் வேறொரு மாதிரி என்று எரிபொருட்களின் விலை நிர்ணயத்தில் மத்திய பாஜக அரசு இரட்டை வேடம் போடுவதன் மூலம் தங்களை என்ன ஏமாளிகளாக நினைக்கிறதா அல்லது கோமாளிகளா கருதுகிறதா என்று தெரியவில்லை என்று பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.
தேர்தல் வந்தால் எரிபொருட்களின் விலையை சில மாதங்களுக்கு ஒரே மாதிரியாக வைத்திருப்பது; தேர்தல் முடிந்தால் பெட்ரோல், டீசல் விலையை ஒரேயடியாக ஏற்றுவது என்று தங்களை முட்டாள்களாக கருதாமல், அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து, எரிபொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க மோடி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment