விருதுநகரில் இளம்பெண் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை... என்ன நடந்தது? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 21, 2022

விருதுநகரில் இளம்பெண் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை... என்ன நடந்தது?

விருதுநகரில் காதலி ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் காதலன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சி
விருதுநகர் அருகே உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்த சோலை மீனா (20). இவர் விருதுநகர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் பரங்கிநாதபுரம் தெருவைச் சார்ந்த பிரவின் குமார் (28) இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற சோலை மீனா காலை பட்டம்புத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்
அவர் தற்கொலை செய்து கொண்ட சில மணி நேரங்களிலேயே அவருடைய காதலன் பிரவீன் குமார் '' தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தங்களின் தற்கொலைக்கு காரணம் சோலை மீனாவுடன் பணிபுரியும் புவனா, ஸ்டீபன் ராஜ் மற்றும் அர்ச்சனா ஆகியோர் தான் காரணம் எனக்கூறி கடிதம் எழுதிவிட்டு அதை தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துவிட்டு தன் காதலி சோலை மீனா போலவே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.

பிரவின் குமார்

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரவீன்குமார் விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.
சோலை மீனாவின் காதலன் பிரவீன் குமார் எழுதிய கடிதத்தின் உண்மை என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad