ஆத்தாடி.. என்னா அடி.. உக்ரைன் செம உக்கிரம்.. உருக்குலைந்து போன ரஷ்ய வாகனங்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 21, 2022

ஆத்தாடி.. என்னா அடி.. உக்ரைன் செம உக்கிரம்.. உருக்குலைந்து போன ரஷ்ய வாகனங்கள்!

உக்ரைன் ராணுவம் நடத்தி வரும் அதிரடித் தாக்குதலில் சிக்கி ரஷ்ய டாங்குகள் உருக்குலைந்து கொண்டிருக்கின்றன.

உக்ரைன் ராணுவம், ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக கொடுத்து வரும் பதிலடி, அதிரடியாக இருக்கிறதாம். இதனால்தான் ரஷ்யாவால் பெரிய பெரிய நகரங்களை இன்னும் பிடிக்க முடியவில்லையாம்.

உக்ரைன் மீதான போரை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது ரஷ்யா. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போரை நிறுத்த என்னவெல்லாமோ செய்து பார்த்தும் கூட எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் கொடுத்து வரும் பதிலடி தொடர்பான பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் படையினருக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கொடுத்து உதவுகின்றன. உக்ரைனும் கூட அதி நவீன ஆயுதங்கள் பலவற்றை வைத்துள்ளது. இதனால்தான் ரஷ்யா திணறிக் கொண்டிருக்கிறது.

உக்ரைன் ராணுவத்திடம் சிக்கி அழிந்த ரஷ்யப் படையினரின் வாகனங்கள் உள்ளிட்டவற்றைப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. அந்த அளவுக்கு உருத் தெரியாமல் அழிக்கும் அளவுக்கு உக்ரைனின் பதிலடி இருக்கிறது. குறிப்பாக டாங்குகளை குறி வைத்து அதிரடித் தாக்குதல் நடத்துகிறது உக்ரைன். அந்த டாங்குகள் முற்றிலும் அழிந்து போய் எலும்புக் கூடுகளாக காட்சி தருகின்றன. அந்த அளவுக்கு மிகத் துல்லியமான, வலுவான தாக்குதலைக் கொடுக்கிறது உக்ரைன் ராணுவம்.

உக்ரைன் தாக்குதலில் இதுவரை கிட்டத்தட்ட 15,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவர்கள் கூறுகின்றன. ரஷ்யத் தரப்பிலிருந்து எந்த தகவலையும் சர்வதேச ஊடகங்கள் சரிவர வெளியிடுவதில்லை. காரணம், இவற்றில் பெரும்பலானாவை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் என்பதால் அவை ரஷ்யாவுக்கு எதிரான செய்திகளை மட்டுமே பிரசுரிக்கின்றன. இதனால் ரஷ்யத் தரப்பிலான செய்திகளை நாம் பார்க்க முடியவில்லை.
அதேசமயம், உக்ரைன் தாக்குதல் தொடர்பாக நிறைய தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன. ரஷ்யாவுக்குச் சொந்தமான 1487 டாங்குகளை உக்ரைன் படையினர் தாக்கி அழித்துள்ளனராம். இதுதவிர 96 போர் விமானங்கள், 118 ஹெலிகாப்டர்கள், 947 வாகனங்கள் உள்ளிட்டவையும் இந்தப் பட்டியலில் வருகின்றன. ரஷ்யாவிடம் பல்வேறு அதி நவீன ஆயுதங்கள் இருந்தாலும் கூட அவற்றை சமாளிக்கும் அளவுக்கு உக்ரைனின் பதிலடியும் இருக்கிறது.

இதற்கிடையே, ரஷ்யா கடைசிக் கட்டமாக அணு ஆயுதங்களைக் கையில் எடுக்கலாம் என்ற அச்சமும் உலக நாடுகளிடம் உள்ளது. உக்ரைனை தனது வழிக்குக் கொண்டு வர முடியாத சூழல் எழும்போது உக்ரைனுக்குள் மட்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்த முனையலாம் என்று அஞ்சப்படுகிறது. காரணம், ரஷ்யா தனது அணு ஆயுத பலத்தை பெருமளவில் நம்பியுள்ளது. பிற ஆயுதங்கள் கைவிட்டாலும் கூட அணு ஆயுதங்கள் கைவிடாது என்ற நம்பிக்கையில் ரஷ்யா உள்ளது. இதுதான் பல நாடுகளையும் கலவரப்படுத்தி வருகிறது.
இதை மனதில் வைத்தே, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தால் அது 3வது உலகப் போராக மாறும் என்று உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் அந்த அளவுக்கு போய் விடக் கூடாது என்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தத்தமது அளவில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad