கருப்பு சட்டைக்காரர்கள் கள்ள உறவில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களது திருமணம் கடந்த உறவே திராவிட மாடல் என ஏகத்துக்கும் பேசி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீண்டும் எல்லை மீறி இருப்பது தமிழக அரசியலில் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பிஜேபியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வருகை தந்தார். இதன் பிறகு எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
என்னை கைது செய்தவர் இங்கே இருக்கிறார்; நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்!
காங்கிரஸ் கட்சி ஒரு பூஜ்ஜியம். எனவே பூஜ்ஜியத்தோடு எது சேர்ந்தாலும் மாற்றம் வர போகிறாதா? இல்லை. காங்கிரஸ் தற்போது தேசிய அளவில் பலவீனம் அடைந்து கொண்டு வருகிறது.
பெரும்பான்மை சமுதாய எதிர்ப்பு அரசியல், இந்து விரோத அரசியல், இந்த மாதிரி அரசியலை தேசிய கட்சிகள் கையாள முடியாது என்பதனை இந்த 5 மாநில தேர்தல் நமக்கு நிரூபித்துக் காட்டியுள்ளது.
மம்தா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அது எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தப்போவது இல்லை. கருப்பு சட்டைக்காரர்களின் திருமணம் கடந்த உறவே திராவிட மாடல்.
திருமணம் கடந்த உறவிற்கு பல கிளைகள், பல இடங்களில் கடைகள் வைத்து இருக்கிறார்கள். ஒழுக்கமாக இருப்பது நேஷனல் மாடல். கடந்த 1967 வரை ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை தான் இருந்தது.
அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் நேரத்தில், தேர்தல் குறித்து அதிக கவனம் செலுத்தும் காரணத்தினால் நிர்வாகத்தை சரியாக கவனிக்க இயலாத சூழல் உருவாகி உள்ளது.
எனவே இதுகுறித்து முழுமையாக பேசி முடிவெடுத்த பிறகு ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பேச இயலும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்களுக்கும் நிர்வாகத்திற்கும் நல்லது.
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தலின்போது தமிழகத்தில் பாஜக சார்பில் யார் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார்கள்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தேர்தல் வரும்போது அதுகுறித்து தெரிய வரும் என பதிலளித்தார்.
No comments:
Post a Comment