12ம் தேதி முதல் TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, April 6, 2022

12ம் தேதி முதல் TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி

12ம் தேதி முதல் TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் வரும் 12-ம் தேதி முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


TNPSC குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கானதேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் வரும் 12ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, அவ்விண்ணப்பத்தின் நகல், பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை வரும் 11ம் தேதிக்குள் vgdeoslm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்கள் அறிய 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad