பகலெல்லாம் நரகம்... அவ்வளோ நாள் குடோனில் வெச்சு.... விருதுநகர் தலித் பெண்ணின் சோக கதை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, April 1, 2022

பகலெல்லாம் நரகம்... அவ்வளோ நாள் குடோனில் வெச்சு.... விருதுநகர் தலித் பெண்ணின் சோக கதை

 விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் எவ்வாறு சிக்கினார் என்பதை குறித்து இந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் சேர்ந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி

8 பேரிடம் இளம்பெண் சிக்கியது எப்படி

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பால் பண்ணை உரிமையாளரின் மகன் ஹரிஹரன், ரைஸ்மில் நடத்தும் ஜூனைத் அகமது, லோடுமேன் மாடசாமி, கார் டிரைவர் பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி கையில் எடுத்த நிலையில் கைதுசெய்யப்பட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனை அடுத்து, ஹரிஹரன் உள்ளிட்ட நான்கு பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளி மாணவர்கள் நான்கு பேரும் ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஏற்கனவே ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரை 6 நாட்களுக்கு சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், சிறார்கள் நான்கு பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.


கூலி வேலை


விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமையானது ஏதோ ஒருநாள் நடந்த சம்பவம் கிடையது. பாதிக்கப்பட்ட பெண் அனுபவித்த கொடுமைகளை எழுதினால் தட்டச்சும் தடுமாறுகிறது. 8 காமுகர்களின் காம பசிக்கு இரையான பத்மா (22) பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தாயின் அரவணைப்பில் வாழந்து வந்தார். குடும்ப வறுமையால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வந்தார். அப்போதுதான் அப்பகுதியில் உள்ள நான்கு பள்ளி மாணவர்கள் மூலம் பத்மாவுக்கு முகநூலில் ஹரிகரனுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.


சிக்கியது எப்படி


விருதுநகர் மேலத்தெருவை சேர்ந்த ஹரிகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி குடிப்பழக்கம் பெண்கள் சோக்கு அதிகமாக இருந்ததால் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில், ரைஸ்மில் நடத்தும் ஜூனைத் அகமது, லோடுமேன் மாடசாமி, கார் டிரைவர் பிரவீன் ஆகியோருடன் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்நிலையில்தான் ஹரிகரனுக்கு பத்மா ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு மது, பிரியாணி என சகலத்தையும் வாங்கி கொடுக்கும் ஹரிகரன், மாணவர்களின் பகுதியில் இருக்கும் விதவை பெண்கள், கணவனை பிரிந்து தனியாக வசிக்கும் மனைவிகள், அழகாக இருக்கும் இளம்பெண்கள், கள்ளக்காதலில் உள்ள பெண்கள் ஆகியோரை தனக்கு லிங்க் செய்து விடுமாறு கோரிக்கை வைத்துள்ளான். அப்படி சிக்கியவர்தான் இளம்பெண் பத்மா.

சிபிசிஐடி


ஹரிகரன் நல்ல மனிதர், நல்ல வேலை வாங்கி கொடுப்பார் என்று வறுமையில் இருக்கும் பெண்ணிடம் ஆசையை தூண்டி ஹரிகரனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அதன் பிறகு, உன்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி பத்மாவையும் காதலிக்க வைத்துள்ளான் ஹரிகரன். ஒருநாள் மதுரை சாலையில் உள்ள நண்பனின் மெடிக்கல் குடோனுக்கு பத்மாவை அழைத்து வந்த ஹரிகரன் மது குடிக்க வைத்தும்,ஆபாச வீடியோக்களை காட்டியும் உடலுறவில் ஈடுபட்டுள்ளான். அதனை தொடர்ந்து அடிக்கடி அந்த குடோனுக்கு வரச்சொல்லி செக்சில் ஈடுபட்டுள்ளான். ஒரு கட்டத்தில் இளம்பெண் திருமண பேச்சை எடுத்தபோது, நீ வேற சாதி, நான் வேற சாதி எனக்கூறி ஏமாற்றியுள்ளார். மேலும், இதைக்கேட்டு பதறிப்போன இளம்பெண்ணிடம் அவருடன் உறவில் இருந்தபோது எடுத்து வைத்த வீடியோவை காட்டி, தினமும் இந்த குடோனுக்கு வந்து என்னுடன் உறவு வைக்க வேண்டும் என்றும் அதற்காக மாதா மாதம் சம்பளம் வாங்கிக்கொள் என்றும் கூறியுள்ளார். அதற்கு இளம்பெண் மறுத்தபோது, ஆபாச வீடியோவை அவரது செல்போனுக்கு அனுப்பி, நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் முகநூல் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் உன் வீடியோ வெளியாகும் என மிரட்டியுள்ளான் ஹரிகரன். எனக்கு திருமணம் ஆகப்போகுது தயவு செய்து தொந்தரவு செய்யாதே என இளம்பெண் அழுதபோதும், திருமணத்துக்கு பிறகு இரவில் உன் கணவனுடன் இரு என்றும் பகலில் என்னுடன் இரு என்றும் ஹரிகரன் கூறியிருக்கிறான். மிரண்டுபோன இளம்பெண் தினமும் மாலை வரை ஹரிகரனுடன் இருந்துவிட்டு மாலை வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

கூட்டு வன்கொடுமை


ஒரு கட்டத்தில் அந்த வீடியோவை காட்டி ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோருடன் உறவு வைக்குமாறு ஹரிகரன் சொல்ல, வேறு வழியில்லாமல் அந்த கொடுமையையும் இளம்பெண் அனுபவித்து வந்துள்ளார். அதோடு முடியாமல், அந்த நான்கு பள்ளி மாணவர்களுக்கும் வீடியோவை அனுப்பிய ஹரிகரன், இந்த வீடியோவை காட்டி என் கண் முன்னாடி 'அவளை' அனுபவிக்க வேண்டும் என கூறவே பள்ளி மாணவர்களும் இளம்பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர். இப்படி அடிக்கடி வீட்டுக்கும், குடோனுக்கும் சென்று வந்த இளம்பெண்ணை தனக்கு தெரிந்த வேறு சில நபர்களுக்கும் ஹரிகரன் இரையாக்க வற்புறுத்தியபோதுதான், பொறுமையை இழந்த இளம்பெண் சம்பவத்தை தாயிடம் கூறி கதறியுள்ளார். பின்னர் இருவரும் ஊரை விட்டு சென்று விடலாம் என நினைத்த நேரத்தில் தங்களுக்கு தெரிந்த நபர் மூலம் விருதுநகர் ரூரல் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Post Top Ad