சிறுமியை ஏமாற்றியவருக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிறுமியை திருமண செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த நபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடந்த 2020 ஆம் ஆண்டு காந்திநகர் பகுதியில் வசித்து வந்த வையாபுரி என்பவரது 17 வயது மகளை அதே பகுதியில் வசிக்கும் நாகமாணிக்கம் என்பவரது மகன் சந்துரு (22) என்பவர் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
அதன் பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்த உடுமலை அனைத்து மகளிர் காவல்துறையினர் மேற்படி சந்துருவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,திருப்பூர் மகிளா நீதிமன்றம் மேற்கண்ட குற்றத்திற்காக சந்துருவுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும்,ரூ.20,000 அபராதமும் விதித்து அதிரடி தீர்பளித்துள்ளது.
No comments:
Post a Comment