துாய்மை பணியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
துாய்மை பணியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில், செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள 14 இடங்களுக்கு, பகுதிநேர துாய்மைப் பணியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பகுதிநேர துாய்மைப்பாணியாளர் ஆண், பெண் என, 14 காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. பணிக்கான தகுதி விபரம்:தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு, 2022, ஜுலை 1ம் தேதியில், எஸ்.சி., எஸ்.டி., 18 முதல், 35 வயது வரை இருக்க வேண்டும். பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., மற்றும் டி.என்.சி., 18 முதல், 32 வயது வரையும், இதர பிரிவினர், 18 முதல், 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மேற்படி தகுதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதிநேர துாய்மைப் பணியாளர், தொகுப்பூதியத்தில் பணி புரிய வேண்டும்.
விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்ப படிவத்தை தயார் செய்து, உரிய சான்றுகளின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மே 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment