சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு - TNPSC - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 3, 2022

சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு - TNPSC

சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு - TNPSC
சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு - TNPSC
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக பல்வேறு போட்டித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

இன்ஜினியரிங் சார்நிலை பணிகளுக்கான போட்டித் தேர்வு 2021 செப்டம்பர் 18 அன்று நடந்தது. இதற்கான மதிப்பெண் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மீன்வளத் துறை, இளநிலை பொறியாளர் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை, இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 9ம் தேதி இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது.
நெடுஞ்சாலை துறையில் இளநிலை வரைவாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் மே 12 மற்றும் 13 ஆம் தேதி நடக்க உள்ளது. பொதுப்பணித் துறையில் இளநிலை ஆய்வாளர் பணி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் மே 16 முதல் 18 வரை நடைபெற உள்ளது. எனவே இது தொடர்பான டிஎன்பிஎஸ்சி, https://tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad