புயல் வேகத்தில் பரவும் தொற்று: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,81,988 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 82 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,557 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 11,065 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,63,251 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 1,05,180 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 4,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment