மே 1ஆம் தேதி முதல் தடை - ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டைனர்ஸ் கிளப் ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டில் புதிய கிரெடிட் கார்டுகளை விநியோகிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. பண பரிவர்த்தனையில் ஈடுபடும் நிறுவனங்கள் இந்தியாவில் தகவல்களை சேமிக்கும் மையம் அமைக்க வேண்டும் எனகடந்த 2018ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை இரண்டு நிறுவனங்களும் பின்பற்றவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் மே 1ஆம் தேதி முதல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவு தொடர்பாக ஆலோசித்து வருவதாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பிப்ரவரி மாதம் இறுதி நிலவரப்படி 15 லட்சத்துக்கு மேலான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
டைனர்ஸ் கிளப் தனியாக கார்டுகளை வழங்குவதில்லை. ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைந்து கார்டுகளை வழங்குகிறது. இந்த இரு கார்டுகளும் ப்ரீமியம் கார்டுகள். கடந்த டிசம்பரில் ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை இணைக்க கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. போதுமான அளவுக்கு தொழில்நுட்ப கட்டமைப்பை உயர்த்தவில்லை என்பதால் ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை வெளியிட்டது.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment