தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு 2021
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்பொழுது வேலைவாய்ப்பு பயிற்சி அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பானது Fitter பணிகளுக்கு பயிற்சி வழங்கிட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலமாக (National Apprenticeship Promotion Scheme (NAPS) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் இந்த பயிற்சி தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன் பயிற்சிகாலம் 25 மாதங்கள் நடைபெறும். இந்த பயிற்சியின் போது தங்களுக்கு ரூபாய் 7,700 முதல் 8,050 வரை ஊதியம் வழங்கப்படும். எனவே இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே தங்களுடைய விண்ணப்பங்களை apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கல்வி தகுதி அதாவது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு பயிற்சி பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு apprenticeshipindia.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.
கல்வி தகுதி:
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
பயிற்சி காலம்:
Basic Training Duration – 06 Months
On the Job Training Duration – 19 Months
இந்த பயிற்சியானது வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்ப முறை:
ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
TNSTC வேலைவாய்ப்பு பயிற்சிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
apprenticeshipindia.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள Apprentice பயிற்சிக்கான அறிவிப்பை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யவும்.
No comments:
Post a Comment