ஏப்ரல் 21 தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day)
தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day) என்பது இந்தியாவின் தேசிய தினங்களில் ஒன்றாகும்.ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 21ம் தேதி இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
தேசிய குடிமை பணிகள் தினம் (அ) சிவில் சேவை தினம் மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றது.
இத்தினம் 2006 ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்திய அஞ்சல் துறையினர் நினைவார்த்த அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்பதை ஏப்ரல் 21 தேசிய குடிமை பணிகள் தினம் குறித்து அஞ்சல்தலை சேகரிப்பாளரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவருமான விஜயகுமார் எடுத்துரைத்தார்
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment