பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை அறிவிப்பு: செய்முறை தேர்வுக்கு மட்டும் வந்து செல்ல அறிவுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வீட்டிலிருந்தபடி தேர்வுக்கு தயராக, பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் செய்முறை தேர்வுக்காக மட்டும் வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் 2வது அலையாக உருவெடுத்து, வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு ஆளாகி வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், பிளஸ் 2 பொதுத்தேர்வை திட்ட மிட்டபடி நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று மாநிலம் முழுவதும் தொடங்கியது. இதனிடையே, கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், செய்முறை தேர்வு நாளன்று மட்டும், சம்பந்தப்பட்ட பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதர நாட்களில், வீட்டிலிருந்தபடியே அவர்கள் பொதுத்தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment