வாட்ஸ் ஆப் தகவல்களால்ஆசிரியர்கள் மன உளைச்சல் !
தமிழகத்தில் கல்வித் துறை உத்தரவின்றி வாய்மொழி உத்தரவு மற்றும் வாட்ஸ்அப் தகவல் அடிப்படையில் ஆசிரியர்களை பள்ளிக்கு வர சொல்வதால் அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஏற்படுகின்றன என்று அதிகாரிகளின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரையில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் தமிழ்க்குமரன் தெரிவித்துள்ளதாவது: கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவுகிறது. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லுாரி பேராசிரியர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பாடம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித உத்தரவுகளும் இன்றி செவிவழி மற்றும் வாட்ஸ்ஆப் தகவல்கள் மூலம் ஆசிரியர்களை பள்ளிக்கு வருமாறு அதிகாரிகள் மிரட்டல் விடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment