கொரோனா பரவலின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல் மூடல்
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் என்று பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் நாளை மறுநாளுக்குள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.புதுவையில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment