வரகு பர்ஃபி! எப்படிச் செய்வது?
வரகு பர்ஃபி!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் விரும்பும் ரிலாக்ஸ் டைம் ஸ்நாக்ஸ் பர்ஃபி. வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம் இந்த வரகு பர்ஃபியை. அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது.
எப்படிச் செய்வது?
கடாயில் ஒரு கப் வரகு அரிசியை மிதமாக வறுத்த பின்னர் அத்துடன் பொடித்த முந்திரி, பாதாம் இரண்டு டேபிள்ஸ்பூன், பால் பவுடர் முக்கால் கப், பால் கால் கப், கன்டென்ஸ்டு மில்க் அரை கப் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும். நன்றாக சேர்த்து வந்ததும் இரண்டு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கிளறி விடவும். பால், கோவா பதம் வந்தவுடன் இறக்கி தட்டில் வெண்ணெய் தடவி அதில் ஊற்றி பரவிவிடவும். சிறிய துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.
சிறப்பு
சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி, மலச்சிக்கலை போக்கி உடல் பருமனை குறைக்கும். சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதைத் தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும்..
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment