வாழைத்தண்டு பட்டர் முறுக்கு செய்முறை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, April 15, 2021

வாழைத்தண்டு பட்டர் முறுக்கு செய்முறை

வாழைத்தண்டு பட்டர் முறுக்கு செய்முறை




தேவையான பொருட்கள்.:

வாழைத்தண்டு – ஒன்று,
அரிசி மாவு – 2 டம்ளர்,
கடலை மாவு – 2 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்,
வெண்ணெய் – 50 கிராம்,
எள் – ஒரு டீஸ்பூன்,
ஓமம் – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை.:
  • வாழைத்தண்டை சுத்தம் செய்து சிறுசிறு துண்டாக வெட்டிக்கொண்டு மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். 
  • அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு அனைத்தையும் ஒன்றாகப் பாத்திரத்தில் போடவும். 
  • அதில் வெண்ணெய், எள், ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும். 
  • இதனுடன் வாழைத்தண்டுச் சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 
  • பிறகு இதில் ஒரு டீஸ்பூன் சூடு செய்த எண்ணெயைச் சேர்த்து பூரி மாவுப் பதத்திற்கு பிசைய வேண்டும். 
  • கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி மாவை முறுக்குகளாகச் சுட்டெடுக்கவும்.
  • அமிலத்தன்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு வாழைத்தண்டு நல்ல தீர்வு தரும். நெஞ்செரிச்சல், நெஞ்சு உறுத்துவது போல இருப்பது போன்ற பிரச்னைகளுக்கு வாழைத்தண்டுச்சாறு சிறந்த மருந்து.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  TAMIL BOOKS PDF    இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!





No comments:

Post a Comment

Post Top Ad