கரப்பான் பூச்சி, எறும்பு, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, April 30, 2021

கரப்பான் பூச்சி, எறும்பு, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க

கரப்பான் பூச்சி, எறும்பு, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கசமையலறை குறிப்பு – வீட்டில் நாம் இருக்கின்றோமோ, இல்லையோ, ஆனால் நமக்கு தொல்லைகளை தரும் பூச்சிகள் மட்டும் ஆட்டம் பாட்டத்தோடு சந்தோஷமாக, நன்கு வீட்டில் உலாவிக் கொண்டிருக்கும். அதில் பெரும்பாலும் வருவது எறும்பு, கரப்பான் பூச்சி, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி போன்றவையே.

அத்தகையவை வீட்டில் இருப்பதால் பெரும் தலைவலி ஏற்படுவதோடு, உண்ணும் உணவுப் பொருட்களில் ஏறி உண்டு, உடலுக்கு பல நோய்களை வர வைக்கின்றன. மேலும் அவற்றை அகற்ற வேண்டும் என்று எண்ணி, அதனை அழிக்க பூச்சி மருந்துகளை வாங்கி அடித்தால், நாம் வீட்டிலேயே இருக்க முடியாத அளவு மருந்து நாற்றமானது இருக்கும்.

இத்தகைய நாற்றத்தை தவிர்க்கவும், பூச்சிகள் வராமல் இருக்கவும் ஒரு சில டிப்ஸ் சொல்றேன் வாங்க..!

இதையும் படிக்க –> பித்தளை பாத்திரம் பளபளக்க – Best Trick To Clean Bronze

சமையலறை குறிப்பு – கரப்பான் பூச்சி ஒழிக்க :
உலமே அழிந்தாலும், அழியாத ஒரு உயிரினம் தான் கரப்பான் பூச்சி. அத்தகைய கரப்பான் பூச்சி வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் தொல்லையைக் கொடுக்கும்.
இந்த கரப்பான் பூச்சியை விரட்ட சிறந்த ஒன்றாக பேக்கிங் சோடா உள்ளது. இந்த பேக்கிங் சோடாவை கரப்பான் பூச்சி வரும் இடங்களில் தூவ வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால், கரப்பான் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். மேலும் வாரத்திற்கு ஒரு முறை கிச்சனை சுத்தம் செய்தால் நல்லது.


 
சமையலறை குறிப்பு – எறும்பு தொல்லை நீங்க:
வீட்டில் கிச்சனில் இருக்கும் சர்க்கரை, வெல்லம் போன்ற சுவையுள்ள இனிப்பு பொருட்களில் அதிகளவு எறும்பு மொய்க்கும், இத்தகைய எறும்பு வராமல் இருக்க இனிப்பு பொருட்களில் சிறிதளவு கிராம்பை போட்டு வைத்தோம் என்றால் கிராம்பின் வாசனைக்கு எறும்பு வராமல் இருக்கும்.

சமையலறை குறிப்பு – மூட்டை பூச்சி அழிக்க:
புதினா இலைகளின் வாசனை என்றால் மூட்டைப் பூச்சிகளுக்கு ஆவதில்லை. அதனால் அவைகளை நீக்க இதனை பயன்படுத்தலாம். கொஞ்சம் புதினா இலைகளை எடுத்து, நீங்கள் தூங்கும் பகுதியில் வைத்துக் கொள்ளவும்.

குழந்தை தூங்கும் தொட்டிலிலும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம். மூட்டைப்பூச்சிகள் விரட்டியாக இந்த புதினா இலைகள் செயல்படும்.

 
அதேபோல் நம் வீட்டு அலமாரிகளில் மூட்டை பூச்சி ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

அவற்றை விரட்ட, நாம் பயன்படுத்தும் குளியல் சோப் கவர் அல்லது தீர்ந்து போன செண்டு பாட்டிலை வைத்தால் மூட்டை பூச்சிகள் வராமல் இருக்கும்.
சமையலறை குறிப்பு  – வண்டு(Vandu Varamal Thadupathu Eppadi) ஒழிய :
Kitchen tips in tamil – பொதுவாக அரிசி, பருப்பு வகை, மாவு பொருட்களில் அதிகமாக வண்டு பிடிக்கும். இந்த வண்டுகள் வராமல் இருப்பதற்கு ஒரு இரண்டு கொத்து வேப்பிலையை போட்டு வைத்தால், வண்டுகள் வராமல் இருக்கும்.

எலி வராமல் இருப்பதற்கு என்ன செய்வது? – வீட்டில் எலி வராமல் இருக்க:
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.

சமையலறை குறிப்பு – பல்லி வராமல் இருக்க:
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.

சமையலறை குறிப்பு – கொசு வராமல் இருக்க:
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசுவிரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.

சமையலறை குறிப்பு – ஈ வராமல் இருக்க:
சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள்.

இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad