கொரோனா அச்சம் வேண்டாம்: ஊக்கம் தரும் உளவியலாளர்கள் கருத்து - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, April 23, 2021

கொரோனா அச்சம் வேண்டாம்: ஊக்கம் தரும் உளவியலாளர்கள் கருத்து


கொரோனா அச்சம் வேண்டாம்: ஊக்கம் தரும் உளவியலாளர்கள் கருத்து



கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மனஉளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

கொரோனா அச்சத்தில் இருந்து வெளியேறி, கொரோனா பரவல் காலத்திலும் மனதை தேவையற்ற பயத்தில் இருந்து மீள உளவியலாளர்கள் சில பரிந்துரைகளை அளிக்கின்றனர். அவற்றை கீழே காணலாம்.

* வைரஸ் பற்றிய செய்திகளிலிருந்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அது குறித்தான செய்திகள் அனைத்தையும் பல நாட்களாக நாம் தெரிந்து வைத்துள்ளோம்.
* இறப்பு எண்ணிக்கையைப் பார்க்க வேண்டாம். சமீபத்திய புள்ளிவிவரங்கள், ஸ்கோரை அறிய இது கிரிக்கெட் போட்டி அல்ல. எனவே அதனை தவிர்க்கவும்.
* கொரோனா வைரஸ் குறித்து இணையத்தில் கூடுதல் தகவல்களைத் தேடாதீர்கள். இது உங்கள் மன நிலையை பலவீனப்படுத்தும்.
* அபாயகரமான செய்திகளை மற்றவர்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும். ஏனெனில் உங்களை போன்ற மன வலிமை சிலருக்கு இருக்காது. எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கருதி இதுப்போன்ற அபாயகரமான செய்திகளை அனுப்புவதால், மனசோர்வு ஏற்படலாம்.


இசையைக் கேளுங்கள்


* முடிந்தால், வீட்டில் இனிமையான இசையைக் கேளுங்கள். குழந்தைகளை மகிழ்விக்க, கதைகள் சொல்வது, அவர்களுடன் பலகை விளையாட்டு விளையாடுவது, எதிர்கால திட்டங்களை பகிர்வது என உங்களை ஈடுபடுத்துங்கள்.
* வீட்டில் அனைவரும் அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற ஒழுக்கத்தை பேணுங்கள்.
* உங்கள் நேர்மறையான மனநிலை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவும், அதே நேரத்தில் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மனச்சோர்வடையச் செய்து வைரஸ்களுக்கு எதிராக பலவீனப்படுத்துகின்றன.
* மிக முக்கியமாக, இதுவும் கடந்து போகும், நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதியாக நம்புங்கள்.



FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad