BREAKING: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.!
போதிய அளவு கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தினசரி 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், கையிருப்பு வைக்கக்கூடிய வகையில் 20 லட்சம் டோஸ் தடுப்பூசியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். தினமும் 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம் உள்ளதால், குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசியை அனுப்புங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.
உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்துகள் தமிழகத்திற்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செங்கல்பட்டில் தயாராக உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு சில இடங்களில் பற்றாக்குறை இருக்கும் நிலையில், பிரதமருக்கு முதல்வர் கடிதம்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment