கொரோனா positive என்று வந்தால் நாம் பின்பற்ற வேண்டிய செயல் இதுவே!
கொரோனா தொற்று முதல் அலையைவிட அதிவேகமாகப் பரவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா இரண்டாவது அலை. கடந்த ஆண்டின் சூழல் இப்படியானது கிடையாது. அப்போது நமக்கு கொரோனா வைரஸ் குறித்த எந்தப் புரிதலும் இல்லை. தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஊரடங்கும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே ஒரே தீர்வாக இருந்தன. அதனால் நிலைமை கைமீறிப் போனது. ஆனால், இப்போது அப்படியல்ல, மக்களிடம் கொரோனா குறித்த தெளிவு அதிகம் இருக்கிறது, தடுப்பூசியும் வந்துவிட்டது. ஆனாலும் கொரோனா, புயல் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக்கொண்டே இருப்பது அதற்கு காரணமாகச் சொல்லப்பட்டாலும், பிரச்னையின் தீவிரம் தெரிந்தும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாததுதான் பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது.
*தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும், அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவுவதையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். கொரோனா வருவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரங்கள் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், கொரோனா தொற்று உறுதியானால் என்ன செய்வது என்பதில் மக்களிடையே குழப்பம் நிலவுகிறது. காரணம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டுத் தனிமையிலிருந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 36 வயதான ஏழுமலை மரணமடைந்திருப்பது.
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment