
தமிழகத்தில் அணைத்து தனியார் பள்ளிகளிலும் RTE சேர்க்கை கட்டாய கல்வி திட்டத்தின் மூலமாக 25 சதவிகிதம் மாணவர் சேர்க்கை வருகிற மே மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
RTE யின் சிறப்பு அம்சம்:
LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் குறைந்த கட்டணத்துடன் படிக்கலாம். அதற்கான கட்டண தொகையை அரசே அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கும்.
தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை மே மாதம் தொடக்கம்!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஆனால் தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு பின்னர் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்.
இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள் படிக்க அரசு வழங்கும் இலவச கட்டாயக்கல்வி திட்டத்தின் மூலமாக 25 சதவிகித மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன. வழக்கமாக இந்த திட்டத்தின் மூலம் மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். அனால் கொரோனா காரணமாக அடுத்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கை மே மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment